06 January 2018

திருமங்கலம் பூலோகநாதஸ்வாமி கோயில் Tirumangalam Boologanathaswamy Temple

19 டிசம்பர் 2017 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகில் திருமங்கலம் என்னுமிடத்தில் உள்ள பூலோகநாதஸ்வாமி கோயிலுக்கு முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுடன் செல்கின்ற வாய்ப்பு கிடைத்தது. உடன் நண்பர் திரு மணி.மாறன் வந்திருந்தார். நுழைவாயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயிலை நினைவுபடுத்தியது. நுழைவுவாயிலை அடுத்து உள்ளே கோயிலின் இடது புறத்தில் நடராஜர் சபை உள்ளது. 

இக்கோயிலின் மூலவர் பூலோகநாதஸ்வாமி ஆவார். அவர் லிங்கத் திருமேனியாக உள்ளார். கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி தனிக்கோயிலாக உள்ளது. இக்கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகின்ற நிலையில் மூலவர் உள்ளிட்ட அனைத்து சிற்பங்களையும் கோயிலுக்கு வெளியே வடப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலாலயத்தில் வைத்துள்ளனர். 

நுழைவாயிலில் உள்ள தூண்களும், முன் மண்டபத்தில் காணப்படுகின்ற வேலைப்பாடுள்ள தூண்களும், அங்கு காணப்படுகின்ற நாட்டியக்கலைஞர்களின் சிற்பங்களும், நடராஜர் சபையில் உள்ள சிவன், பார்வதி, தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன் ஆகியோரின் நுணுக்கமான சிற்பங்களும், மூலவருடைய கருவறையைச் சுற்றி வரும்போது தட்சிணாமூர்த்தி இருக்கின்ற இடத்தில் உள்ள கட்டட அமைப்பும், பூக்களால் காணப்படுகின்ற வரிகளும் இக்கோயிலின் சிறப்பான கூறுகளாகும். திருப்பணி நடைபெற்றதும் ஒரு முறை இக்கோயிலுக்குச் செல்வோம், அங்குள்ள சிற்பங்களை ரசிப்போம், வாருங்கள்.

அழகான தூண்களைக் கொண்ட நுழைவாயில்

வேலைப்பாடமைந்த தூண்களைக் கொண்ட முன் மண்டபம்
நடராஜர் சபையின் முன்புறம் அமைந்துள்ள சிவன், பார்வதி, தட்சிணாமூர்த்தி

நடராஜர் சபையின் முன்புறம் அமைந்துள்ள விநாயகர், முருகன்
 

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி இருக்கின்ற இடத்தில் சிங்கங்கள் தாங்கி நிற்க தூண்களைக் கொண்ட மண்டப அமைப்பு 


திருமங்கலத்தின் பழைய பெயர் ராஜராஜன் திருமங்கலம் என்றும், கி.பி.1128ஆம் ஆண்டில் இக்கோயில் கட்டப்பட்டதாகவும் கூறும் வரலாற்று அறிஞர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் இங்குள்ள சில சிற்பங்களைப் பற்றியும், கட்டட நுட்பங்களைப் பற்றியும்  கூறியுள்ள செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்துள்ளன.  









முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் உடன்
(இடமிருந்து) திருமதி கல்யாணராமன், திரு கல்யாணராமன், திரு மோகன் குருக்கள், முனைவர் ஜம்புலிங்கம், திரு மணி.மாறன்
இதே நாளில் இக்கோயிலுக்குச் செல்லும் முன்பாக ஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற தலமான தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்திலுள்ள வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். 




நன்றி : 
இக்கோயில்களுக்கு எங்களை அழைத்துச் சென்ற முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும், உடன் வந்த நண்பர் திரு மணி.மாறன் அவர்களுக்கும், கண்டுபிடிப்பு பற்றிய செய்திகளை வெளியிட்ட நாளிதழ்களுக்கும் நன்றி.


English version of the article:
On 19th December 2017 I went to Boologanathaswamy Temple at Tirumangalam near Mayiladuthurai in Nagapattinam district of Tamil Nadu, alongwith Dr Kudavayil Balasubramanian. Mr Mani. Maaran also came with us. The entrance of the temple reminded me the Iravathesvarar Temple of Darasuram near Kumbakonam. Next to the entrance in the left side, Nataraja Sabha is found.  

The presiding deity of the temple is known as Boologanathaswamy. He is in linga form. At the left side of the temple, the shrine of the the consort of the deity, is found as a separate temple. As the temple is under renovation, the sculptures were kept outside the temple, in the balalaya.  

The pillars found at the entrance, the aesthetically designed pillars of the front mandapa, the sculptures of artists and dancers, the miniature sculptures of Siva, Parvathi, Dakshinamurti, Vinayaka, Muruga in the Nataraja sabha, the beautiful kosta of the Dakshinamurti and flower rows around the sanctum sanctorum exposes the speciality of the temple. Let us visit the temple after renovation.

On the same we went to Dayanitheesvarar Temple at Vadakurankaduthurai in Papanasam taluk of Thanjavur district of Tamil Nadu, sung by Gnanasambandar.

20 comments:

  1. அருமையான தகவல்
    பயனுள்ள பதிவு

    ReplyDelete
  2. அருமையான படங்கள். சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  3. அழகிய படங்களுடன் தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்து இருக்கிறேன் பங்கு பெற அழைக்கிறேன் எமது தளம் வந்து அறிந்து கொள்க நன்றி

    ReplyDelete
  4. கலைப் பொக்கிஷம் ஒன்றினைத் தரிசனம் செய்திருக்கின்றீர்கள்..

    குறித்துக் கொண்டேன்.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  5. கலைப்பொக்கிஷங்களை பத்தி அறிய தந்தமைக்கு நன்றிப்பா

    ReplyDelete
  6. அருமையான புகைப்படங்களுடன் பயனுள்ள தகவல்கள் - குழுவினருக்கு நன்றி.

    ReplyDelete
  7. அய்யா உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் டைப் செய்யும் எழுத்துரு அங்காங்கே உடைந்திருக்கிறது, எளிதான எழுத்துருவிற்கு அழகி பயன்படுத்துங்கள்.

    எழுத (டைப்) செய்ய எளிதாக இருக்கும் சுட்டி இணைக்கப்பட்டுள்ளது.

    https://www.azhagi.com/oper.html

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே

    மிகவும் அழகான புகைப்படங்களுடன்,விரிவான தகவல்களும் நிறைந்த பதிவு. இக்கோவிலை அறிமுகபடுத்தி மனம் நிறைவாக செய்திகளை படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  9. நமசிவாய விருது வித்யாசமான தகவல். பகிர்வுக்கு நன்றி சார்

    ReplyDelete
  10. அரிய தகவல்களைத் தந்த பதிவு.நாளிதழ்கள் சில சமயங்களில் பயனுள்ள செய்திகளையும் வெளியிடுகின்றன!

    ReplyDelete
  11. படங்களும் பகிர்வும் அருமை ஐயா
    களப் பயணங்கள் தொடரட்டும்
    தம +1

    ReplyDelete
  12. அழகிய படங்கள்...
    சிறப்பான தகவல்கள்....

    ReplyDelete
  13. திருமங்கலம், பூலோகநாதசுவாமி திருக்கோயில் பற்றிய தங்கள் கட்டுரை மிகவும் அற்புதமாக உள்ளது. புகைப்படங்கள் கட்டுரைக்கு அழகு சேர்க்கின்றன. தங்கள் ஆய்வுப்பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அருமையான புகைப்படங்கள். தங்களின் தேடலும் பதிவும் தொடர வாழ்த்துகள் அய்யா

    ReplyDelete
  15. சிறப்பான தகவல்கள் ஐயா. உங்களுடன் ஒரு உலா வர ஆசையுண்டு. எப்போது நேரம் வாய்க்கிறதோ.....

    ReplyDelete
  16. சுவாரஸ்யமான தகவல்கள்.உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. மிக அருமை ஐயா. நேரில் பார்த்த நிறைவு

    ReplyDelete
  18. தகவல்கள் அருமை அய்யா...

    ReplyDelete